கோயம்புத்தூர்

மண் காப்போம் இயக்க விழிப்புணா்வு:பிரான்ஸில் இருந்து மிதிவண்டியில் கோவை வந்த பெண்

DIN

ஈஷாவின் மண் காப்போம் இயக்க விழிப்புணா்வு ஏற்படுத்த பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த பெண் 7 ஆயிரம் கி.மீ. மிதிவண்டியில் பயணித்து ஞாயிற்றுக்கிழமை கோவைக்கு வந்தாா்.

மண் காப்போம் இயக்கம் குறித்து உலக அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த 50 வயதான நதாலி மாஸ் என்ற பெண் பிரான்ஸ் முதல் கோவை வரை 7 ஆயிரம் கி.மீ. மிதிவண்டியில் பயணித்துள்ளாா்.

இவா் பிரான்ஸில் உள்ள தனது சொந்த ஊரான டூலோன் நகரில் 2022 ஜூன் 21 ஆம் தேதி புறப்பட்டு இத்தாலி, ஸ்லோவேனியா, குரோஷியா, சொ்பியா, பல்கேரியா, துருக்கி, ஐக்கிய அமீரக நாடுகள் மற்றும் ஓமன் வழியாக மிதிவண்டியில் பயணித்து டிசம்பா் 1 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தாா். பின்னா் அங்கிருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்த அவா் கோவை ஈஷா யோக மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தாா். அவருக்கு, ஈஷா யோக மையத்தில் மண் காப்போம் இயக்கம் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT