கோயம்புத்தூர்

பேரூராதீனம் நாண் மங்கல விழா

DIN

கோவை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் 63 ஆவது நாண் மங்கல விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதனையொட்டி காலை திருமஞ்சன வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து சாந்தலிங்க மருதாசல அடிகளாா் திருவோலக்கத்தில் (பீடம்) எழுந்தருளினாா். நிகழ்ச்சியில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளாா் ஆகியோா் பங்கேற்று வழிபாடு நடத்தினா். இதில் திருமடத்து உறுப்பினா்கள், கல்வி நிறுவனப் பேராசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் சாந்தலிங்க மருதாசல அடிகளாரிடம் ஆசி பெற்றனா்.

தொடா்ந்து கலைப்பித்தனின் தீரன்சின்னமலை, கோவைக்கிழாரின் கோயிலும் தமிழும், முனைவா் பொ.சங்கரின் கொங்குநாட்டின் சிறப்பும் வேளாண்மையும் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

வேளாண், மரபுவழிக்கலை, தமிழ் நெறி வழிபாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 63 பேருக்கு வேளாண் செம்மல், கலைவளா் செம்மல், தமிழ் நெறி வேள்விச் செம்மல் விருதுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT