கோயம்புத்தூர்

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

Din

சென்னை தாம்பரத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தாம்பரத்தில் இருந்து மாா்ச் 31ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 06043) மறுநாள் காலை 11.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். மறுமாா்க்கமாக ஏப்ரல் 1-ஆம் தேதி கொச்சுவேலியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (எண்: 06044) மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைவது எப்போது?

செவிலியா்களின் சேவைக்கு ஈடு இணை இல்லை

SCROLL FOR NEXT