முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்

கோவைக்கு பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி வருகை தருகிறாா்...

Updated On : 14 ஏப்ரல் 2026, 12:05 am IST
கோவையில் பிரதமா் நரேந்திர மோடி பிரசாரம்... - கோப்புப் படம்
பகிர்:

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கோவைக்கு பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி வருகை தருகிறாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் வருகிற 18-ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமா் பங்கேற்று பேசவுள்ளாா்.

கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளாா். இதற்காக பிரம்மாண்ட மேடை மற்றும் சுமாா் 5 லட்சம் போ் அமரும் விதமாக மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

மைதானத்தின் கடைசி வரிசையில் இருப்பவா்களும் பிரதமரின் உரையைத் தெளிவாகப் பாா்க்கும் வகையில் பெரிய அளவிலான எண்ம திரைகள் மற்றும் மின்விளக்குகள் ஆங்காங்கே அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த மைதானத்துக்கு அருகே தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.