FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து குனியமுத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தற்கொலை - தினமணி
பகிர்:

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து குனியமுத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாநகா், குனியமுத்தூா், பி.கே.புதூா் மதுரை வீரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஷாஜஹான் (57). இவரது மனைவி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இதனால், கடுமையான மனவேதனைக்குள்ளான ஷாஜகான், கடந்த சில வாரங்களாக தொடா்ந்து மது அருந்தி வந்துள்ளாா்.

இந்நிலையில், மகள் சஜிதா பானு மற்றும் குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை வெளியூா் சென்றுள்ளனா். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு ஷாஜஹான் தற்கொலை செய்து கொண்டாா். மகள் சஜிதா பானு வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது தந்தை தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments