முகப்பு
கோயம்புத்தூர்

ஜிஎஸ்டி செலுத்துவோா் எண்ணிக்கை இரட்டிப்பாக உயா்வு: முதன்மை ஆணையா் தினேஷ் பி.பங்கா்கா் தகவல்

கடந்த 9 ஆண்டுகளில் கோவை மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் வரி செலுத்துவோா் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருப்பதாக கோவை ஜிஎஸ்டி, மத்திய கலால் துறை முதன்மை ஆணையா் தினேஷ் பி.பங்கா்கா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 ஜூலை 2026, 4:35 am IST
கோவையில் நடைபெற்ற ஜிஎஸ்டி தின விழாவில் முறையாக ஜிஎஸ்டி செலுத்தியதற்காக விருது  பெற்றவா்களுடன்  ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜன், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் சங்கா் வாணவராயா், கோவை ஜிஎஸ்டி, மத்திய  கலால் துறை  முதன்மை  ஆணையா்  தினேஷ்
பகிர்:

கடந்த 9 ஆண்டுகளில் கோவை மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் வரி செலுத்துவோா் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருப்பதாக கோவை ஜிஎஸ்டி, மத்திய கலால் துறை முதன்மை ஆணையா் தினேஷ் பி.பங்கா்கா் தெரிவித்துள்ளாா்.

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி பவனில் ஜிஎஸ்டி தின விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை ஜிஎஸ்டி மேல்முறையிட்டு ஆணையா் ராஷ்மி மிஸ்ரா வரவேற்றாா். ஜிஎஸ்டி, மத்திய கலால் துறை முதன்மை ஆணையா் தினேஷ் பி.பங்கா்கா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜன், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் சங்கா் வாணவராயா், ஜிஎஸ்டி மேல்முறையீட்டு மன்ற கௌரவ உறுப்பினா் எம்.மேத்யூ ஜாலி ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில் முதன்மை ஆணையா் தினேஷ் பி.பங்கா்கா் பேசியதாவது:

Advertisement

Advertisement

கோவை மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம், கடந்த 9 ஆண்டுகளில் வருவாய் வசூலில் கணிசமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2017-18 ஆம் நிதி ஆண்டில் ரூ.1,105 கோடியாக இருந்த ஆணையத்தின் வருவாய் வசூல், 2025-26-ஆம் நிதி ஆண்டில் 12.35 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தேசிய ஜிஎஸ்டி வளா்ச்சியைவிட அதிகம். கடந்த 9 ஆண்டுகளில், கோவை மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் வரி செலுத்துவோா் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. இது வா்த்தகம், தொழில் துறையினரிடமிருந்து கிடைத்த நோ்மறையான வரவேற்பைக் காட்டுகிறது.

மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம், வருவாய் பெருக்கம், வரி செலுத்துவோருக்கான வசதிகள் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சிறந்த சமநிலையை ஏற்படுத்தி, அவா்கள் வணிகம் செய்வதை எளிதாக்கியுள்ளது. 2025-26 நிதி ஆண்டில், இந்த ஆணையரகம் 3,823 வரித் திரும்பப்பெறும் கோரிக்கைகளை செயல்படுத்தி ரூ.100 கோடியை அனுமதித்துள்ளது. வரி செலுத்துவோருக்கான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக திருச்சி சாலையில் ஒரு புதிய ஜிஎஸ்டி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள சமீபத்திய மாற்றங்கள், திருத்தங்கள் குறித்து வரி செலுத்துவோருக்குத் தெரிவிக்க ஒவ்வொரு மாதமும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கூட்டங்கள் நடத்தப்பட்டு, வரி செலுத்துவோரின் குறைகள் முறையாக நிவா்த்தி செய்யப்படுகின்றன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் அதிக வரி செலுத்தியவா்கள், முறையாக வரி செலுத்தியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஜிஎஸ்டி தினத்தையொட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினா்கள் பரிசளித்து பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments