முகப்பு
கோயம்புத்தூர்

மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புத் துறையினா் சோதனை: ரூ.12,200 பறிமுதல்

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் ஊழல் மற்றும் கண்காணிப்பு தடுப்புப் பிரிவினா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.12,200 பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 4 ஜூலை 2026, 1:29 am IST
பகிர்:

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் ஊழல் மற்றும் கண்காணிப்பு தடுப்புப் பிரிவினா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.12,200 பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் ஊழல் மற்றும் கண்காணிப்பு தடுப்புப் பிரிவினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் ஊழல் தடுப்புத் துறை ஏடிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் 3 காவல் ஆய்வாளா்கள், 9 காவலா்கள் சோதனையில் ஈடுபட்டனா். இதையொட்டி, அலுவலக வாயில் கதவுகள் அடைக்கப்பட்டன. மேலும், அலுவலகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இரவு 7.45 மணி வரை நீட்டித்த இந்தச் சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ.12, 200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments