முகப்பு
கோயம்புத்தூர்

ஈஷாவில் பராமரிப்புப் பணிக்காக தரிசனத்துக்கு நாளை அனுமதி இல்லை

Updated On : 6 ஜூலை 2026, 1:19 am IST
ஈஷாவில் பராமரிப்புப் பணிக்காக தரிசனத்துக்கு நாளை அனுமதி இல்லை - கோப்புப் படம்
பகிர்:

ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்க பைரவி மற்றும் ஆதியோகி வளாகங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) தரிசனத்துக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகியை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருகை தருகின்றனா்.

இந்நிலையில் பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) ஒரு நாள் மட்டும் ஆதியோகி, தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி வளாகங்களில் பக்தா்களின் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. ஜூலை 8-ஆம் தேதி முதல் வழக்கம்போல தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments