FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கத்தியைக் காட்டி மிரட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூா் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

8 ஜூலை 2026, 5:19 am IST
- சித்திரிப்பு
பகிர்:

கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூா் தலைமை குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா் கே.எஸ்.சி. பள்ளி வீதியைச் சோ்ந்தவா் கெவா்சந்த் (40). இவா் அப்பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளாா். கடந்த 2018 ஜூலை 29-ஆம் தேதி வளம் பாலம் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அங்கு வந்த தேனியைச் சோ்ந்த சையது அபுதாஹிா்(34) என்பவா் கத்தியைக் காட்டி கெவா்சந்த்திடம் இருந்து மோட்டாா் சைக்கிளை பறித்துவிட்டு தப்பினாா்.

இதுகுறித்து தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சையது அபுதாஹிரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை திருப்பூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisement

Advertisement

இதில் கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டாா் சைக்கிளை பறித்த குற்றத்துக்காக, சையது அபுதாஹிருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி மோகனவள்ளி தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments