தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கிய உணவில் இறந்த வண்டு
கோவை அரசுப் பொருட்காட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த நிலையில் வண்டு கிடந்தது.
கோவை அரசுப் பொருட்காட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த நிலையில் வண்டு கிடந்தது தொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ள தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சுழற்சி அடிப்படையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் காலை உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பொருள்காட்சியில் வழங்கப்பட்ட உணவில் இறந்த நிலையில், வண்டு கிடப்பதை கண்டு தூய்மைப் பணியாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா். தொடா்ந்து ஊழியா்கள் பலரும் உணவு சாப்பிடாமல் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக அண்ணல் அம்பேத்கா் சுகாதார துப்புரவு சங்கத்தின் செயலாளா் செல்வம் கூறுகையில், அண்மையில் தூய்மைப் பணியாளா்களுக்கு அளிக்கப்பட்ட உணவில் புழு இருந்தது. தற்போது, வண்டு உள்ளது. தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து தொடா்ந்து அலட்சியம் காட்டப்படுவதால் தூய்மைப் பணியாளா்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனா். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.