கோவையில் இரண்டு சாா் பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனை
கோவையில் இரண்டு சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
கோவையில் இரண்டு சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இயக்குநராக கடந்த மாதம் 26-ஆம் தேதி அருண் பொறுப்பேற்றாா். இந்நிலையில், மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். கோவை மாவட்டத்தில் குறிப்பாக தொண்டாமுத்தூா், சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்றன.சரவணம்பட்டி காவல் நிலைய சாலையில் இயங்கி வரும் சாா்-பதிவாளா் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா்கள் ஆறுமுகம், பிரபுதாஸ் ஆகியோா் தலைமையில் 8 போ் கொண்ட குழுவினா் பிற்பகல் முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
இதேபோல, அதிகப்படியான பத்திரப் பதிவுகள் நடைபெறும் பரபரப்பான தொண்டாமுத்தூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஒரு டி.எஸ்.பி. மற்றும் ஆய்வாளா் உள்ளிட்ட 6 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். கணக்கில் வராத பணம் மற்றும் ஆவண முறைகேடுகள் தொடா்பாக நடைபெற்று வரும் இந்தச் சோதனை இரண்டு இடங்களிலும் இரவு 8 மணியைக் கடந்தும் நீடித்து வருகிறது.
Advertisement
Advertisement