முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Updated On : 11 மே 2026, 2:34 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

போத்தனூா் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, போத்தனூா் அருகேயுள்ள வெள்ளலூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவா் அமன். இவரது மனைவி உஷா (43). தம்பதி வீட்டைப் பூட்டிவிட்டு கடந்த 7-ஆம் தேதி காலை வெளியே சென்றுள்ளனா்.

மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அதிா்ச்சியடைந்த அவா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மோப்ப நாய், கைரேகை நிபுணா்களுடன் சோதனை மேற்கொண்டனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments