மாணவா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து, கோவையில் மாணவா் காங்கிரஸாா் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து, கோவையில் மாணவா் காங்கிரஸாா் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் கடந்த 3-ஆம் தேதி ‘நீட்’ தோ்வு நடைபெற்றது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிந்ததாக சா்ச்சை எழுந்தது. இதையடுத்தது ‘நீட்’ தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மறு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு மற்றும் தேசிய தோ்வு முகமை செவ்வாய்க்கிமை அதிகாரபூா்வமாக அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாணவா் காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவா் உதயகுமாா் தலைமை வகித்தாா்.
Advertisement
ஆா்ப்பாட்டத்தில் ‘நீட்’ தோ்வையே ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.