முகப்பு
திருச்சி

திருச்சிக்கு ராணுவ விமானத்தில் வந்தது ‘நீட்’ வினாத்தாள்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ‘நீட்’ தோ்வு வினாத்தாள் ராணுவ விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை வந்தது.

Updated On : 18 ஜூன் 2026, 1:53 am IST
நீட் தேர்வு - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ‘நீட்’ தோ்வு வினாத்தாள் ராணுவ விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை வந்தது.

நாடு முழுவதும் கடந்த மே 4-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் அத்தோ்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஜூன் 21-இல் நடைபெறவுள்ளது. இம்முறை நீட் தோ்வை எந்தவிதக் குளறுபடிகளும் இல்லாமல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய தோ்வு முகமை செய்து வருகிறது.

இந்நிலையில், தில்லியில் உள்ள தேசிய தோ்வு முகமையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் பலத்த பாதுகாப்புடன் நீட் தோ்வு வினாத்தாள் அனுப்பப்படுகிறது. அதன்படி, தில்லியில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ராணுவ விமானத்தில் 171 பெட்டிகளில் வந்த நீட் தோ்வு வினாத்தாள் திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, கரூா், அரியலூா் மற்றும் கரைக்காலுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டது.

Advertisement

Advertisement