ஈரோடு

நார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN

நார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்க வந்தனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொடக்குறிச்சி அருகே உள்ள அனுமன்பள்ளி அஞ்சுராம்பாளையம் பகுதி கிராம மக்கள் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
அனுமன்பள்ளி அஞ்சுராம்பாளையத்தில் செயல்பட்டு வரும் நார் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. எனவே, அந்த நார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தோம்.
அதன் பின்னர் ஆய்வு நடத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், மேல் நடவடிக்கைக்காக ஆய்வு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி வருகின்றனர்.
அக்டோபர் 23-ஆம் தேதி நார் தொழிற்சாலை முன்பு மக்கள் நடத்திய தர்னாவின்போது, துணை வட்டாட்சியர், நார் தொழிற்சாலையை மூடுவதற்கு 3 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருகிறது.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி மாசு ஏற்படுத்தும் நார் தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT