ஈரோடு

கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்

DIN

கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
ஈரோடு நகர் அருள்மிகு ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமாக 14,900 சதுர அடியில் தெப்பக்குளம் உள்ளது.  இக்குளத்தை சீரமைக்கும் பணி  ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ரூ. 3.40  லட்சம்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  சுமார் ஆறு மாத காலத்துக்குள்  இப்பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணியை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ தென்னரசு,  மாநகராட்சி ஆணையர் மு.சீனி அஜ்மல்கான், கோட்டாட்சியர் ஆர்.நர்மதாதேவி,  இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையர் முருகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

சுற்றுவாரியாக மின்னணு திரையில் முடிவுகள் வெளியீடு: ஆட்சியா்

வனத்துறை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின புகைப்படப் போட்டி

முன்னாள் அமைச்சா் பெயரில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி: இளைஞா் கைது

SCROLL FOR NEXT