முகப்பு
ஈரோடு

ரூ. 1.15 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1 கோடியே 15 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.  

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:24 am IST
பகிர்:

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1 கோடியே 15 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.  
பெருந்துறை அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 2,003 மூட்டைகளில் 90,000 கிலோ   கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.  இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 134.30-க்கும், அதிகபட்சமாக ரூ. 138.05-க்கும் விற்பனையானது. 
இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 54.70-க்கும், அதிகபட்சமாக ரூ. 132.05-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 1 கோடியே 15 லட்சத்துக்கு ஏலம் மூலமாக 
விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.