FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

பேல்பூரி

மைக்ரோ கதை

Updated On : 31 மே 2026, 12:01 pm IST
பகிர்:

கேட்டது

(திருச்சி பேருந்து நிலையத்தில் இருவர்)

''தெரிஞ்சவங்க ரெண்டு பேரு சொன்னா உங்களுக்குப் பணம் தர்றேன்...''

Advertisement

Advertisement

''நான் ஒண்ணு... நீங்க ஒண்ணு!''

-ரெட்டோடை பஞ்சவண்ணமகன்,

கருப்பம்புலம்.

(திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேருந்து நிலையம் அருகே இரு இளைஞர்கள்)

''மச்சான், அவ என் முறைப்பெண்...''

''அத்தை பெண்ணா?,மாமா பெண்ணா?''

''ரெண்டும் இல்லை... போறப்போ, வர்றப்போ என்னைப் பார்த்து முறைக்கிற பெண்...''

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.

(சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பூங்கா ஒன்றில் இருவர்)

''நீங்க என்ன குற்றம் செஞ்சுட்டு ஜெயிலுக்குப் போனீங்க?''

''நான் ஒரு குற்றமும் செய்யலை, சார்!''

''வேற எதுக்காகப் போனீங்க?''

''வார்டனை பார்க்கப் போனேன்!''

''வார்டனை ஏன் பார்த்தீங்க?''

''வார்டன் என் மகனாச்சே!''

-குலசை நஜ்முதீன், மாம்பாக்கம்.

கண்டது

(ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி அறிவிப்புப் பலகையில் எழுதியிருந்தது)

''ஒரு வெற்றி போதும்... உன் எல்லா தோல்விகளையும் மறைக்க!''

-துரை ஏ.ரமணன், துறையூர்.

(தூத்துக்குடியில் ஓடிய வாகனம் ஒன்றில் எழுதியிருந்தது)

''மரம் பட்டுப் போனால் பறவைகள் வருவதில்லை. வார்த்தைகள் கெட்டுப் போனால் உறவுகள் வருவதில்லை!''

-ஏ.தாமஸ், சிவகளை.

(புதுகை செல்லும் வழியில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

''ரண்ச்ண் உணவகம்''

-கி. சரஸ்வதி, ஈரோடு.

யோசிக்கிறாங்கப்பா!

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை...

துன்பங்களைச் சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை!

-எம் அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

மைக்ரோ கதை

இளைஞன் ஒருவன் குளிப்பதற்காக ஆற்றின் ஓரமாக நின்றுகொண்டு வெகுநேரமாய் சுற்றும் முற்றும் பார்த்தான்.

தூரத்தில் ஒரு மரத்தின் அடியில் பெரியவர் ஒருவர் தவம் செய்துகொண்டிருந்தார்.

அவரிடம் சென்ற இளைஞன், ''ஐயா... நான்ஆற்றில் குளிக்கப் போகிறேன். எந்தத் திசையில் நின்று குளித்தால் நல்லது'' என்றான்.

அதற்கு அந்தப் பெரியவரோ, ''உமது ஆடைகள் திருடு போகாமல் இருக்க, அவை இருக்கும் திசை நோக்கி குளி'' என்றார்.

-ஜே.மகரூப், குலசேகரப்பட்டினம்.

முன்னே செல்ல வேகம் முக்கியமல்ல...

பின் வாங்காமல் இருப்பதே விவேகம்!

-என்.கோமதி, பெருமாள்புரம்.

எஸ்எம்எஸ்

முன்னே செல்ல வேகம் முக்கியமல்ல... பின் வாங்காமல் இருப்பதே விவேகம்!

-என்.கோமதி, பெருமாள்புரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments