முகப்பு
ஈரோடு

வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் திருட்டு

ஈரோட்டில் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, ரூ. 30ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:25 am IST
பகிர்:

ஈரோட்டில் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, ரூ. 30ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஈரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதியைச் சார்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கிருஷ்ணகுமார் (59). இவரது மனைவி பரிமளா தேவி. இவர்களுடைய 2 பெண்களும் திருமணமாகி  வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் மர்மநபர்கள்  சுற்றுச்சுவர் ஏறி முதல் மாடியில் குதித்து, கதவை  உடைத்து பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகை, 30 ஆயிரம் ரொக்கம், வளாகத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தையும் மர்ம நபர்கள்  திருடிச் சென்றனர்.
புதன்கிழமை காலையில்  வழக்கம்போல் பரிமளா தேவி எழுந்து கீழே வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதையும், பீரோ திறந்து கிடந்ததும் அதில் வைத்திருந்த 40 பவுன் நகை, 30 ஆயிரம் ரொக்கம் காணாமல் போனதும் தெரியவந்தது.
இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக  வீட்டுக்குள்ளே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை கிருஷ்ணகுமார் எடுக்கச் சென்றபோது அதுவும் காணாமல் போனது  தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு தாலுகா போலீஸார், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  அமுதா உள்ளிட்டோர்  சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகள், தடயங்களைச் சேகரித்தனர்.
 இச்சம்பவம் தொடர்பாக, ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து  விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.