முகப்பு
ஈரோடு

ரூ. 13.15 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 13.15 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On : 25 டிசம்பர் 2018, 5:50 am IST
பகிர்:

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 13.15 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இங்கு, விற்பனைக்கு வந்த 18,986 தேங்காய்களில் சிறியவை ரூ. 5.70 முதலும், பெரியவை ரூ. 16.50 வரையிலும் என மொத்தம் ரூ. 1,77,278 க்கு ஏலம் போனது. 76 மூட்டைகள் தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 85.19 முதல் ரூ. 112.89 வரையில் என ரூ. 5,29,729 க்கும், 120 மூட்டைகள் எள் கிலோ ரூ. 115.29 முதல் ரூ. 131.69 வரையில் என ரூ. 501,661 க்கு விற்பனையாயின. 
70 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 17.91 முதல் ரூ. 18.69 வரையில் என ரூ. 1,07,156 க்கு விலை போயின. இங்கு விற்பனைக்கு வந்த 266 மூட்டை, 277.95 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ. 13,15,824 க்கு விற்பனை செய்யப்பட்டது.


கொடுமுடியில்...

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ரூ. 11 லட்சத்து 61 ஆயிரத்துக்கு 396 க்கு திங்கள்கிழமை விற்பனையாயின.
கொடுமுடி சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் 9,267 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், தேங்காய் கிலோ அதிகபட்சமாக ரூ. 32.35 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 25.15 க்கும் ஏலம் போயின.
128 மூட்டைகளில் கொண்டு வந்த தேங்காய் கொப்பரை ரூ. 5,69,679 க்கு விற்பனையாயின. இதில், முதல் தரம் அதிகபட்சமாக ரூ. 115.40 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 106.99 க்கும், இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ. 96.89 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 76.35 க்கும் விற்பனையாயின.
விவசாயிகள் கொண்டு வந்த  59 மூட்டை எள் ரூ. 5,16,224 க்கு விற்பனையாயின. இதில், சிவப்பு ரக எள் அதிகபட்சமாக கிலோ ரூ. 122.41 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 106.91 க்கும், வெள்ளை எள் அதிகபட்சமாக ரூ. 121.91 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 113.59 க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம், ரூ. 11லட்சத்து 61 ஆயிரத்து 396 க்கு வேளாண் விளை பொருள்கள் விற்பனையாயின.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments