முகப்பு
ஈரோடு

சாலை விபத்தில் இளைஞர் சாவு

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர், சாலையோரப் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

Updated On : 23 ஜூலை 2018, 7:47 am IST
பகிர்:

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர், சாலையோரப் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த, கருமாஞ்சிறை, கைத்தான்வலசைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (30). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு வந்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊருக்குத் திரும்பிச் சென்றார். 
அவர், பெருந்துறையை அடுத்த வாவிக்கடை அருகே சென்றபோது நிலை தடுமாறி சாலையோரப் பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷ், பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments