மாவட்ட தடகளப் போட்டி: ஈங்கூர் யுனிக் அகாதெமி பள்ளி சிறப்பிடம்
மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பெருந்துறையை அடுத்த ஈங்கூர் தி யுனிக் அகாதெமி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பெருந்துறையை அடுத்த ஈங்கூர் தி யுனிக் அகாதெமி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
தேசிய தடகள விளையாட்டுத் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் 1000- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், ஈங்கூர் தி யுனிக் அகாதெமி பள்ளியைச் சேர்ந்த சௌபாக்யா குழந்தைவேலு 100 மீ தடை ஓட்டம், மும்முறை நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும், சித்ரசேனாநேருகஸ்தூரி, குண்டெறிதலில் வெள்ளிப் பதக்கமும், ஸ்ருதி, 100 மீ தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும், சசிதரன்தங்கமுத்து ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
அகில்ஆதித்யா, நந்தனா தினேஷ், ஆதிஷ்கிருஷ்ணா ஆகியோர் மாநில அளவில் நடைபெறும் துரித நடைப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், வரும் ஆகஸ்டு மாதம் சென்னையில் நடைபெறும் மாநில தடகளப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
பள்ளித் தலைவர் இளங்கோ ராமசாமி, முதல்வர் உமையவள்ளி இளங்கோ மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளும் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.