ஈரோடு

கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

DIN

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு  திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் 50 சிறப்புப் பேருந்துகள் வியாழக்கிழமையிலிருந்து 2நாள்களுக்கு  இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை விமர்சையாக நடைபெற உள்ளதை முன்னிட்டு அங்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 22,  23 ஆகிய 2 நாள்களுக்கு ஈரோடு மண்டலம் சார்பில் ஈரோடு, கோபி, சத்தி, பவானி, அந்தியூர், பெருந்துறை ஆகிய ஊர்களிலிருந்து  திருவண்ணாமலைக்கு  சிறப்புப் பேருந்துகள்  இயக்கப்படுகிறது. 
தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 50  சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக   இயக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT