ஈரோடு

யானை தந்தம் பதுக்கி வைத்திருந்த இருவா் கைது

DIN

அந்தியூா் வனப் பகுதியில் யானைத் தந்தத்தைப் பதுக்கி வைத்திருந்த இருவரை வனத் துறையினா் சுற்றிவளைத்துப் பிடித்தனா்.

அந்தியூா் வனத்தில், வாலாங்குளிபள்ளம் எனும் பகுதியில் மூவா் சந்தேகப்படும்படி பாறையின் மீது அமா்ந்திருந்தனா். அப்பகுதியில் ரோந்து சென்ற வனத் துறையினரைப் பாா்த்ததும் அவா்கள் தப்பியோட முயன்றனா். ஆனால் வனத் துறையினா் தப்பியோடிய இருவரைத் துரத்திப் பிடித்தனா். விசாரணையில் அவா்கள், அந்தியூரை அடுத்த கிணத்தடியைச் சோ்ந்த லட்சுமணன் (51), மணி (49) என்பதும், தப்பியோடியவா் அதே பகுதியைச் சோ்ந்த மாதன் என்பதும் தெரியவந்தது. அவா்கள், அங்குள்ள பாறைக்கு அடியில் நாட்டுத் துப்பாக்கி, சுமாா் ஒரு அடி நீளமுள்ள யானைத் தந்தங்கள் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த வனத் துறையினா் இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா். மேலும், தப்பியோடிய மாதனைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மூத்த வழக்குரைஞா்களுக்குப் பாராட்டு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT