பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியின் எனர்ஜி கிளப் சார்பில் ஆற்றல் பாதுகாப்பு
கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியின் எனர்ஜி கிளப் சார்பில் ஆற்றல் பாதுகாப்பு என்ற தலைப்பில் தொழில்நுட்பக் கருத்தரங்கம் கல்லூரித் தலைவர் பி.வெங்கடாசலம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் மேட்டூர் அனல் மின் நிலைய மின்னியல் துறை உதவிப் பொறியாளர் ஆர்.சங்கர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அனல் மின் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் ஆற்றல் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், பொறியியல் படிப்பின் முக்கியத்துவத்தையும் பற்றி கலந்துரையாடினார்.
கல்லூரி முதல்வர் ப.தங்கவேல் முன்னிலை வகித்தார். கல்லூரி இணைச் செயலர் ஜி.பி.கெட்டிமுத்து வரவேற்றார்.
கருத்தரங்கில், துணை முதல்வர் எஸ்.பிரகாசம், இயந்திரவியல் துறைத் தலைவர் கே.சி.ஆனந்தன், எனர்ஜி கிளப் ஒருங்கிணைப்பாளர் ரத்தினவேல் சுப்பிரமணியம், பேராசிரியர்கள், இயந்திரவியல் துறை மற்றும் மின்னியல் துறை சார்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இயந்திரவியல் துறை உதவிப் பேராசிரியர் கோ.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.