முகப்பு
ஈரோடு

வேளாளர் பொறியியல் கல்லூரியில் இன்று மாணவர்களுக்கான வழிகாட்டி முகாம்

ஈரோடு, திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதும்

Updated On : 24 ஜனவரி 2019, 12:26 am IST
பகிர்:

ஈரோடு, திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி முகாம் வியாழக்கிழமை (ஜனவரி 24) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை வெளியிட்ட தகவல்:
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை (ஜனவரி 24) காலை 9.30 மணியளவில் நடைபெறும்   மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி  முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) அ.கலியமூர்த்தி பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 2,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.