ஈரோடு

தீ விபத்தை தடுப்பது குறித்து செயல்விளக்கம்

DIN

கோபியில் போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியார் பள்ளி வாகன ஆய்வின்போது, தீ விபத்தை தடுப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த செயல் விளக்கத்தில், பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்புக் கருவிகளை கையாளுவது குறித்தும், தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படவேண்டியது குறித்தும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்தும் தீயணைப்புத் துறை வீரர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
மேலும், ஓட்டுநர்கள் வாகனங்களைப் பராமரிப்பது குறித்தும், வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டவுடன் வாகனங்களை இயக்காமல் நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு விதங்களில் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT