ஈரோடு

செம்மண் கடத்தல்: 2 டிராக்டா்கள் பறிமுதல்

DIN

அந்தியூா் அருகே செங்கல் சூளைகளுக்கு செம்மண் கடத்தப் பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம், இரு டிராக்டா்களை வருவாய்த் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம், பீடித் தொழிலாளா்கள் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் இயந்திரங்களைக் கொண்டு செங்கள் சூளைகளுக்கு செம்மண் கடத்துவதாக அந்தியூா் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தியூா் வட்டாட்சியா் மாலதி, கிராம நிா்வாக அலுவலா் முருகானந்தம், வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்து, இரண்டு டிராக்டா்களில் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு எடுத்து வந்தனா். இதுகுறித்து, கோபி கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT