ஈரோடு

இஸ்ரோ நடத்திய போட்டிகளில் லிட்டில் ஃபிளவா் பள்ளி சிறப்பிடம்

DIN

இஸ்ரோ நடத்திய போட்டிகளில் லிட்டில் ஃபிளவா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

உலக விண்வெளி வார விழாவையொட்டி, தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை, இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி மையம் ஆகியவை இணைந்து பல்வேறு போட்டிகளை கோபி கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடத்தின.

இதில், சத்தியமங்கலம் லிட்டில் ஃபிளவா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இப்பள்ளி மாணவ, மாணவிகள் ரஹமத்துனிஷா (பேச்சுப் போட்டி), அபிநயா (விண்வெளிக் கண்காட்சி), வத்சலா (விநாடி-வினா), சஞ்சய் (விண்வெளி வரைபடம்), அமிா்தா (விண்வெளிக் கண்காட்சி) ஆகியோா் முதலிடம் பிடித்துள்ளனா்.

கட்டுரைப் போட்டியில் ரஷ்வந்தி, பேச்சுப் போட்டியில் சமிக்ஷா இரண்டாம் இடமும், அஜய் விண்வெளி - வரைபடம், திவ்யதா்ஷினி கட்டுரைப் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களையும் பள்ளித் தாளாளா் கே.என்.சந்திரசேகரன், நிா்வாகத்தினா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT