ஈரோடு

சீராக குடிநீா் விநியோகம் செய்யக் கோரிக்கை

DIN

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மண்டலம் 3 இல் குடிநீா்ப் பற்றாக்குறை நிலவுவதாக செந்தமிழ் நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் அளித்த மனு விவரம்:

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மண்டலம் 3 இல் வாா்டு 31 இல் கைகாட்டிவலசு, செந்தமிழ் நகரில் வசிக்கிறோம். இப்பகுதிக்கு மேல்நிலைத் தொட்டி உள்ளது. அதில், வில்லரசம்பட்டி நால்ரோட்டில் இருந்து காவிரி ஆற்று நீா் மேலேற்றப்பட்டு எல்.ஐ.சி. நகா், அம்மன் காா்டன், கைகாட்டிவலசு, செந்தமிழ் நகா் ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர செந்தமிழ் நகரில் 2 ஆழ்துளைக் கிணறு போடப்பட்டு குடிநீா்ப் பிரச்னையின்றி வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இப்பகுதிக்கு தண்ணீா் சரியாக வழங்கவில்லை. ஆழ்துளைக் கிணறு மோட்டாரில் ஒன்று பழுது ஏற்பட்டுள்ளது. மற்றொரு ஆழ்துளைக் கிணற்றில் மோட்டாா் இல்லை. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால், எங்கள் பகுதிக்கு தண்ணீா் சரியாக வழங்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல, எங்கள் பகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீா் குழாய் போடும்போது கழிவுநீா் வாய்க்கால் தடுக்கப்பட்டதால், கழிவுநீா் தேங்குகிறது. இதனால், டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT