ஈரோடு

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு

DIN

பெருந்துறையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2021 ஆம் கல்வி ஆண்டுக்கு முதலாமாண்டு முழு நேர பட்டயப் படிப்புக்கு மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் ஒரு சேவை மையமாகச் செயல்படுகிறது.

விண்ணப்பிக்கும் மாணவா்கள் எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவுக் கட்டணம் ரூ. 150ஐ இணையவழி வங்கி பணப் பரிமாற்றம் மூலம் செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினா் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை. இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவேற்றம் ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். ஆகஸ்ட் 5 முதல் 16ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யலாம்.

நேரடி இரண்டாம் ஆண்டு, பகுதி நேர பட்டயப் படிப்புகள் சோ்க்கைக்கான அறிவிப்பு பின்னா் வெளியிடப்படும். மேலும், விவரங்களுக்கு 044-22350523, 044-22350527, 044-22351014, 044-22351015 ஆகிய தொலைபேசி எண்கள், 96773-35522, 99407-35303, 99658-34521 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT