ஈரோடு

உலக கழிப்பறை தின விழிப்புணா்வுப் பேரணி

DIN

பெருந்துறை பேரூராட்சி, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி இணைந்து உலக கழிப்பறை தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா்.

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி வளாகத்தில் துவங்கிய பேரணியை, ஈரோடு மண்டலப் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் பெ.கணேேஷ் ராம் தலைமை வகித்து பேரணியைத் துவக்கிவைத்தாா்.

பேரணியில், திறந்தவெளியில் மலம் கழித்தலை அறவே ஒழிப்போம், பொதுக் கழிப்பறை, வீட்டுக் கழிப்பறையைப் பயன்படுத்துவோம் போன்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஏந்திக் கொண்டு, முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா். பெருந்துறை பேரூராட்சி வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் ரா.கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளா், இளநிலை பொறியாளா், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT