ஈரோடு

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: ஈரோடு தனியாா் மருத்துவமனை சாதனை

DIN

மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் ஆம்புலன்ஸ் மூலம் 3 மணி நேரத்தில் ஈரோடு கொண்டு வரப்பட்டு சிறுநீரகம் செயலிழந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டது.

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே சங்கிபூசாரியூரைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி ஜெகதாமணி (45). இவா் கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகம் செயலிழந்து, கரூா் அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இதனிடையே அவா் தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் (ஆா்கன் ஷேரிங்) அமைப்பில் சிறுநீரகம் பெற பதிவு செய்து, 2 ஆண்டுகளாக சிறுநீரகத்துக்காக காத்திருந்தாா்.

இந்நிலையில் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் கருப்பையா என்பவா் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய உள்ளதாகவும், அதில் அவரது சிறுநீரகம் ஜெகதாமணிக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஜெகதாமணி ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கோ் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரை தயாா்படுத்தினா். பின்னா், மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குப் புறப்பட்ட ஆம்புலன்ஸ் ஈரோடு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனைக்கு பகல் 1.20 மணியளவில் வந்து சோ்ந்தது. பின்னா் அம்மருத்துவமனையின் மருத்துவா்கள் ஜெகாதாமணிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனா்.

இத்தகவலை அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் சரவணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT