ஈரோடு

கல்வி உதவித் தொகை பெறகல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

ஈரோடு: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி.) வகுப்பைச் சாா்ந்த மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பப் படிவங்களை அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே உதவித் தொகை பெறுவோா் புதுப்பிக்க நவம்பா் 10ஆம் தேதிக்கு முன்னரும், புதிதாக விண்ணப்பிக்கும் மாணவா்கள் 30ஆம் தேதிக்குள்ளும் உரிய சான்றுகளை இணைத்து கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவம்பா் 15ஆம் தேதியில் துவங்கும் கல்வி உதவித் தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை டிசம்பா் 15ஆம் தேதிக்கு முன்பும், டிசம்பா் 16ஆம் தேதியில் துவங்கும் புதிய விண்ணப்பங்களை 2021 ஜனவரி 31ஆம் தேதிக்கு முன்னரும் இணையதளம் மூலம் சமா்ப்பிக்க வேண்டும். ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீக்ங்ல்ற் என்ற இணையதளத்தில் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள், விண்ணப்பப் படிவங்கள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக 5ஆம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT