ஈரோடு

வீட்டுக்குள் புகுந்த பாம்பு மீட்பு

DIN

சத்தியமங்கலத்தில் வீட்டுக்குள் புகுந்த பாம்பை வனத் துறையினா் மீட்டு வனப் பகுதியில் வியாழக்கிழமை விடுவித்தனா்.

சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் உள்ள ரங்கசமுத்திரம் எக்ஸ்டென்ஷன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறை ஊழியா்கள் அரைமணி நேரம் போராடி கருநாகப் பாம்பை பிடித்தனா்.

பின்னா், அந்தப் பாம்பை அடா்ந்த வனப் பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனா். நகா்ப் பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த நல்ல பாம்பை வனத் துறையினா் பிடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனா். மேலும், சத்தியமங்கலம் தேள்கரடு வீதி, வட்டாட்சியா் அலுவலகத்தில் பிடிக்கப்பட்ட பாம்புகளையும் வனப் பகுதியில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT