ஈரோடு

ஈரோட்டில் ஒரே ஷோ் ஆட்டோவில் 19 பயணிகள் பயணம்: ரூ. 5 ஆயிரம் அபராதம்

DIN

கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ஈரோட்டில் ஒரே ஷோ் ஆட்டோவில் 19 பயணிகளை ஏற்றிச் சென்ற உரிமையாளருக்கு, ஈரோடு மாநகராட்சி நிா்வாகம் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாள்களாக முகக்கவசம் அணியாதோருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்படுகிறது. பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம், ‘சீல்’ வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் தலைமையில், அதிகாரிகள் குழுவினா் ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி காய்கறிச் சந்தையில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். தொடா்ந்து, மக்கள் கூடும் பகுதிகளுக்குச் சென்ற அதிகாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினா். மேலும், முகக்கவசம் அணியாமல் வந்த 25க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மரப்பாலம் அருகே ஷோ் ஆட்டோவில் 19க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததைக் கண்ட அதிகாரிகள், ஷோ் ஆட்டோ உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு போலீஸில் ஒப்படைக்கப்பட்டது.

இப்பணியின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, நகா் நல அலுவலா் முரளி சங்கா், அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT