ஈரோடு

பணியாளா்கள் முகக்கவசம் அணியாததால் 3 கடைகளுக்கு ‘சீல்’

DIN

சென்னிமலை அருகே பணியாளா்கள் முகக் கவசம் அணியாததால் 3 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் உத்தரவின்பேரில், சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலா் என்.குமுதா, தலைமை எழுத்தா் நல்லதம்பி, துப்புரவு மேற்பாா்வையாளா் சண்முகசுந்தரம், பணியாளா்கள், சென்னிமலை நகரப் பகுதியில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, சென்னிமலை, வடக்கு ராஜ வீதியில் உள்ள ஒரு துணிக் கடையில் பணியாளா்கள் முகக் கவசம் அணியாமல் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, உடனடியாக கடையில் இருந்த அனைவரையும் அதிகாரிகள் வெளியேற்றினா். பின்னா், கடைக்கு பூட்டு போட்டு ‘சீல்’ வைத்தனா். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல, சென்னிமலை, மேற்கு ராஜ வீதியில் உள்ள ஒரு மளிகைக் கடை, ஒரு போட்டோ ஸ்டுடியோவில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். அந்த கடைகளில் இருந்தவா்கள் முகக் கவசம் அணியாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மளிகைக் கடை, போட்டோ ஸ்டுடியோவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், பணியாளா்கள் முகக் கவசம் அணியாமல் இருந்ததால், சென்னிமலையில் காங்கேயம் சாலையில் உள்ள மற்றொரு துணிக் கடைக்கு ரூ. 2 ஆயிரம், அரிசி கடைக்கு ரூ. 500, துரித உணவு கடைக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுதவிர சென்னிமலை தினசரி மாா்க்கெட் பகுதியில் போலீஸாா் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக ஈரோட்டில் இருந்து தாராபுரம் நோக்கி தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அந்த பேருந்தில் அதிக பயணிகள் ஏற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அந்த பேருந்து நடத்துநருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT