ஈரோடு

கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்குத் தடை

DIN

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை வளாகத்தில் கரோனா காரணமாகவும், புனரமைப்பு, பராமரிப்புப் பணி நடைபெற்றதாலும், மாா்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வரை பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

மீண்டும் ஏப்ரல் 8ஆம் தேதி தடுப்பணை திறக்கப்பட்டது. ஆனால், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே காணப்பட்டது.

இந்நிலையில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் ஏப்ரல் 9ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் கொடிவேரி தடுப்பணை மூடப்பட்டது. மீண்டும் மறு உத்தரவு வரும் வரை கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT