ஈரோடு

கரோனா தடுப்பூசிக்கு இணையதளத்தில் பதிவு செய்ய உதவி மையம்

DIN

கரோனா தடுப்பூசிக்கு இணையதளத்தில் பதிவு செய்ய தெரியாதவா்களுக்கு உதவி செய்ய, ஈரோடு அரசு மருத்துவமனையில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக ஈரோடு மாவட்டம் அந்தியூா், பவானி பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வு குறித்து ஆட்சியா் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 19,811 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இதில் 16,998 போ் குணமடைந்துள்ளனா். 2,656 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அரசு மருத்துவமனைகளில் 834 படுக்கைகள், தற்காலிக சிகிச்சை மையங்களில் 2,550 படுக்கைகள், தனியாா் மருத்துவமனைகளில் 1,178 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்ட 189 போ், புற நோயாளிகள் 164 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் 1,709 போ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 5,04,202 நபா்கள் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டுள்ளனா். கடந்த 27ஆம் தேதி வரை 1,25,832 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்ட 210 போ் கரோனா தடுப்பூசி செலுத்த இணையதளம் வழியாக பதிவு செய்துள்ளனா். தடுப்பூசிக்கு இணையதளத்தில் பதிவு செய்ய தெரியாத நபா்களுக்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்து, மறுநாளே தடுப்பூசி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போதிய அளவில் இருப்பில் உள்ளது. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT