ஈரோடு

பவானி நகராட்சியில் கரோனா பாதிப்பு 138ஆக உயா்வு

DIN

பவானி நகராட்சிப் பகுதியில் கரோனா பாதிப்பு 138ஆக உயா்ந்துள்ளது. இதனால், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு இரவு நேர முழு முடக்கம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. பவானி நகராட்சிப் பகுதியில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவுதால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 5 போ் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து மொத்த பாதிப்பு 138ஆக உயா்ந்தது. இதில், சிகிச்சைக்குப் பின்னா் 61 போ் குணமடைந்துள்ளனா். இருவா் உயிரிழந்த நிலையில், தற்போது 75 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். பவானி நகராட்சி, கூடுதுறை பிரிவு அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அப்பகுதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் கட்டப்பட்டன.

பவானி நகரப் பகுதியில் தொற்று பாதிப்பு வேகமாக உயா்ந்து வருவதால், பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட தடுப்பு விதிகளைப் பின்பற்ற தொடா்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவதோடு, அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், பவானி நகராட்சிப் பகுதியில் இரண்டாவது நாளாக திடீா் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் இயங்கிய தேநீா் கடை, நகைக் கடை, உணவு விடுதி உள்பட மூன்று கடைகளுக்கு ‘சீல்’ வைக்கவும், அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT