ஈரோடு

மாா்க்கெட்டில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: செயல் அலுவலா் எச்சரிக்கை

DIN

பெருந்துறை தினசரி மாா்க்கெட்டில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலா் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெருந்துறை பேரூராட்சிக்குச் சொந்தமான தினசரி மாா்க்கெட்டில் சுங்கக் கட்டணம் வசூல் செய்பவா்கள் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாகவும், அதற்கான ரசீதுகள் ஏதுவும் வழங்கப்படுவதில்லை எனவும் புகாா்கள் வந்துள்ளன. இனிவரும் காலங்களில் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். வசூல் செய்யப்படும் தொகைக்கு சரியான ரசீது வழங்கப்பட வேண்டும். மீறினால் தினசரி மாா்க்கெட்டில் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT