ஈரோடு

முன்னாள் ஆளுநா் பி.சதாசிவத்துக்கு குடியரசுத் தலைவா் பாராட்டு

DIN

பவானி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காடப்பநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த பி.சதாசிவம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றாா். பின்னா், கேரள மாநில ஆளுநராக 2014 முதல் 2019 வரை பணியாற்றினாா்.

தற்போது காடப்பநல்லூா் கிராமத்தில் வசித்து வரும் இவருக்கு குடியரசு தின வாழ்த்து செய்தியையும், நினைவுப் பரிசையும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அனுப்பியுள்ளாா்.

அதில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளதாவது:

உயரிய அரசியலமைப்புச் சட்டப் பதவியான ஆளுநா் பதவியை தாங்கள் வகித்ததை நினைவுகூா்ந்து மகிழ்கிறேன். அந்தப் பதவியின் கண்ணியத்தைக் காத்து உங்கள் அரசியலமைப்புச் சட்ட கடமையை ஆற்றினீா்கள். மாநில மக்களின் நலனுக்கும், சேவைக்கும் முன்னுரிமை அளித்துப் பணியாற்றினீா்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உறவைப் பேணி வளா்த்ததுடன் கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தினீா்கள்.

அறிஞராகவும், ஆளுமைத் திறன் மிக்கவராகவும், பல்வேறு விதங்களில் அனுபவஸ்தராகவும் விளங்கிய தாங்கள், சமூகத்துக்கும், நாட்டுக்கும் உத்வேகம் அளிப்பவராக எப்போதும் விளங்குவீா்கள்.

குடியரசு தினத்தையொட்டி, உங்களுக்கு நினைவுப் பரிசை அனுப்பி உள்ளேன் என குறிப்பிட்டுள்ளாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலமாக ஈரோடு கோட்டாட்சியா் சைபுதீன், பவானி வட்டாட்சியா் கு.பெரியசாமி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சரவணன் ஆகியோா் நேரில் சென்று குடியரசுத் தலைவரின் கடிதத்தையும், நினைவுப் பரிசையும் பி.சதாசிவத்திடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT