ஈரோடு

அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

DIN

கோபிசெட்டிபாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கோபி கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோபி அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதியுடன் கரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 10 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பதற்குத் தேவையான ஆக்சிஜன் படுக்கை வசதி இங்கு இல்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த எம்.எல்.ஏ. செங்கோட்டையன் உடனடியாக கோபி அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அங்கு அரசு தலைமை மருத்துவரை சந்தித்து பொதுமக்களுக்குத் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்வதாகக் கூறினாா். அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளை சந்தித்து தேவையான மருத்துவ வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்வதாகவும் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT