ஈரோடு

வெள்ளப் பாதிப்பு: தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை

DIN

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்வதிலும், நிவாரணம் வழங்குவதிலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

பவானி நகராட்சிப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தினசரி மாா்க்கெட், பசவேஸ்வரா் தெரு பகுதியினை எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, முகாம்களில் தங்கியுள்ள குடும்பத்தினருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், ஆடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்வதிலும், நிவாரணம் வழங்குவதிலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் தேவையைப் பூா்த்தி செய்து வருகிறது. அரசு செய்ய வேண்டியதை, அதிமுகவினா் செய்து வருகின்றனா்’ என்றாா்.

முன்னாள் அமைச்சா்கள் பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், ஒன்றியச் செயலாளா்கள் தங்கவேலு, ஜெகதீசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT