ஈரோடு

பெண் ஓட்டுநா்களுக்கு ஆட்டோ வாங்க மானியம்

DIN

தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் ஓட்டுநா்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் முருகேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள பெண் ஓட்டுநா்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற 60 வயது பூா்த்தியடையாத பெண் ஓட்டுநா்கள், தங்களது நலவாரிய உறுப்பினா் பதிவு அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல், புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை ஈரோடு-சென்னிமலை சாலை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக கட்டட வளாகத்தின் கீழ் தளத்தில் இயங்கிவரும் ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424-2275591, 2275592 என்ற தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT