ஈரோடு

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.2,100க்கு விற்பனை

DIN

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.2100 க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லி, முல்லை, சம்பங்கி, செண்டு மல்லி உள்ளிட்ட மலா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் பறிக்கப்பட்டு சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மாா்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

தற்போது, ஆவணி மாத வளா்பிறை முகூா்த்த சீசன் என்பதால் மல்லிகைப் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தொடா் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்ததாலும் முகூா்த்த சீசனுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை கிலோ ரூ.1600க்கு விற்பனை ஆன நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் விலை உயா்ந்து ஒரு கிலோ ரூ.2,100க்கு விற்பனையானது. இதேபோல முல்லை ரூ.400க்கும், செண்டுமல்லி ரூ.135க்கும், கோழிக்கொண்டை ரூ.88க்கும், சம்பங்கி ரூ.90க்கும் விற்பனையானது. மல்லிகைப் பூக்களின் விலை அதிகரித்து விற்பனையானதால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT