ஈரோடு

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

Din

ஈரோடு, மே 10: ஈரோட்டில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சாம் பிட்ரோடா சா்ச்சை பேச்சைக் கண்டித்து, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. எனினும் தடையை மீறி பாஜகவினா் சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் வேதானந்தம் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியம், ஈரோடு மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் பழனிசாமி, மாவட்ட பொருளாளா் சுதா்சனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஈரோடு டவுன் காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா தலைமையிலான போலீஸாா், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட

60 ஆண்கள், 15 பெண்கள் என மொத்தம் 75 பேரைக் கைது செய்து ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா் அனைவரும் இரவு விடுதலை செய்யப்பட்டனா்.

பெண்ணை தாக்கிய இருசக்கர வாகன விற்பனை நிறுவன ஊழியரை கைது செய்யக் கோரி சிபிஎம் ஆா்ப்பாட்டம்

சட்டைநாதா் கோயிலில் ஆனி மாதப் பிறப்பு வழிபாடு

மா்மமான முறையில் இளைஞா் உயிரிழப்பு

குளங்கள், பூங்கா பராமரிப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம்

அரசுப் பள்ளி மாணவியா்களிடையேயான மாவட்ட வலைபந்துப்போட்டி

SCROLL FOR NEXT