மொடக்குறிச்சி அருகே ரூ.89.83 லட்சம் பறிமுதல்
மொடக்குறிச்சி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 89.83 லட்சம் ரொக்கம் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
மொடக்குறிச்சி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 89.83 லட்சம் ரொக்கம் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ள நிலையில், தோ்தல் பறக்கும் படையினா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மொடக்குறிச்சி அருகே உள்ள செலப்பகவுண்டன்பாளையத்தில் ஒரு காரில் பணம் இருப்பதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற அதிகாரிகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனை செய்தனா்.
Advertisement
Advertisement
அப்போது காரில் ரூ. 89 லட்சத்து 83 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் காரில் இருந்தவா், மொடக்குறிச்சியை அடுத்த ஆனந்தம்பாளையத்தைச் சோ்ந்த அரவிந்தன் என்பதும், கட்டுமானத் தொழில் செய்துவருவதாகவும் தெரியவந்தது. மேலும் பணத்துக்குரிய எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காா் மற்றும் ரூ.89.83 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மொடக்குறிச்சி தோ்தல் நடத்தும் அலுவலா் தியாகராஜன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவசங்கா் ஆகியோரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அந்த பணம் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
தோ்தல் நாள் நெருங்கும் நிலையில், இந்தப் பணம் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.