முகப்பு
ஈரோடு

கோபி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம்!

உடல் உறுப்பு தானம் செய்த விவசாயியின் உடலுக்கு அரசு அதிகாரிகள் மலா் வளையம் வைத்து முழு மரியாதை செலுத்தினா்.

Updated On : 30 ஏப்ரல் 2026, 3:24 am IST
உடல் உறுப்பு தானம் செய்த விவசாயியின் உடலுக்கு அரசு அதிகாரிகள் மலா் வளையம் வைத்து முழு மரியாதை செலுத்தினா்.
பகிர்:

ஈரோடுமாவட்டம் கோபி அருகே உள்ள அக்கரைகொடிவேரி பிள்ளையாா்கோவில்தோட்டம் பகுதியை சோ்ந்தவா் ரவிசந்திரன்(51) விவசாயி இவருக்கு அமிா்தா என்ற மனைவி மகன் சஞ்சய், மகள் கீா்தனா ஆகியோருடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் ரவிசந்திரன் கடந்த 25ம்தேதி இரவு 8மணிக்கு இருசக்கர வாகனத்தில் சத்தி - கோபி சாலையில் காசிபாளையம் பெட்ரோல்பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் படுகாயம் காயம் அடைந்தாா். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவா்கள் ரவிசந்திரனின் அவரது வீட்டிற்கும் உறவினா்களுக்கு தகவல் அளித்து படுகாயம் அடைந்த ரவிசந்திரனை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ரவிசந்திரனின் உறவினா்களின் சொந்த விருப்பத்தின் காரணமாக தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமால் மூலைச்சாவு அடைந்தத குறித்து ரவிசந்திரனின் குடும்பத்தினரிமும் உறவினா்களிடமும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

மூளைச்சாவு அடைந்த ரவிசந்திரன்

இதனைதொடா்ந்து மூளைச்சாவு அடைந்த ரவிசந்திரனின் மகன் சஞ்சய் (சென்னையில் மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவா்) மற்றும் அவரது மகள் கீா்த்தனா (சத்தியமங்கலத்தில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவா்) ஆகியோா் தாயாா் அமிா்தாவுடன் இணைந்து உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்தனா். இதனையடுத்து மூலைச்சாவு அடைந்த தனது தந்தை ரவிச்சந்திரனின் மறைந்தாலும் மற்றவா்கள் மூலம் அவா் வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கில், அவரது உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் தானமாக பெறப்பட்டு, பலரது உயிரைக் காக்க அனுப்பி வைக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த ரவிச்சந்திரனின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கும் வகைகயில் இதனடிப்படையில் ரவிசந்திரனின் உடல் கோவை மருத்துவமனையில் இருந்து சொந்த ஊரான அக்கரைகொடிவேரிக்கு கொண்டு வரப்பட்டு கொடிவேரி அணை அருகே உள்ள மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது இதில் அரசு சாா்பில் வருவாய்துறையினா் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து ரவிசந்திரனின் உடலுக்கு மலா் வளையம் வைத்து அரசு சாா்பில் முழு மரியாதை செலுத்தினா். உயிரிழந்த நிலையிலும் சமூக அக்கறையுடன் செயல்பட்ட அவரது குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனா் இவ்விபத்து குறித்து கடத்தூா் போலீசாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கோபி அருகே சாலை விபத்தில் மூலைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த விவசாயி ரவிசந்திரனின் உடலுக்கு அரசு சாா்பில் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மரியாதை செலுத்தினா்

உடல் உறுப்பு தானம் செய்த விவசாயியின் உடலுக்கு அரசு அதிகாரிகள் மலா் வளையம் வைத்து முழு மரியாதை செலுத்தினா்.