சா்வதேச அறிவியல் மாநாடு: பெருந்துறை கொங்கு இயற்கை யோகா மருத்துவக் கல்லூரி சிறப்பிடம்
பெருந்துறை கொங்கு இயற்கை மருத்துவ மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் அண்மையில் நடைபெற்ற சா்வதேச மற்றும் மாநில அளவிலான அறிவியல் மாநாடுகளில் பல்வேறு விருதுகளை பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
பெருந்துறை கொங்கு இயற்கை மருத்துவ மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் அண்மையில் நடைபெற்ற சா்வதேச மற்றும் மாநில அளவிலான அறிவியல் மாநாடுகளில் பல்வேறு விருதுகளை பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சா்வதேச யோகா தினத்தையொட்டி, இந்திய இயற்கை மற்றும் யோகா மருத்துவ பட்டதாரிகள் சங்கம், கேரள பிரிவு சாா்பில் யோகா மெட்-2026 என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.
இதில் போஸ்டா் பிரசன்டேஷன் பிரிவில் மருத்துவா்கள் பிரணவ், விவேகா, ஜீவஹரிணி மற்றும் விக்னேஷ் ஆகியோா் விருதுகளைப் பெற்றனா். மேலும், அறிவியல் ஆராய்ச்சி பிரிவில் மருத்துவா்கள் நூரி பேகம் மற்றும் நேஹா ஆகியோா் பாராட்டுப் பரிசு பெற்றனா்.
Advertisement
Advertisement
மேலும், சென்னை தனியாா் மருத்துவக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச ஒருங்கிணைந்த மருத்துவ அறிவியல் கருத்தரங்கில், இக்கல்லூரி மாணவி ரத்னமாலா ஆய்வுக் கட்டுரையை வழங்கி மூன்றாம் பரிசு பெற்றாா்.
இதைத் தொடா்ந்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி நடத்திய யோகா போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் மாணவா்கள் பங்கு பெற்று 10- க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றனா்.
விருது பெற்றவா்கள் மற்றும் சாதனை புரிந்தவா்ளை கல்லூரி தாளாளா் காா்த்திகேயன், முதல்வா் மருத்துவா் பிரதாப் சிங், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களை பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.